உத்தரபிரதேச தேர்தல்; கால்பந்தை வீசி வாக்கு சேகரித்த மம்தா பானர்ஜி..!


உத்தரபிரதேச தேர்தல்; கால்பந்தை வீசி வாக்கு சேகரித்த மம்தா பானர்ஜி..!
x
தினத்தந்தி 8 Feb 2022 3:19 PM IST (Updated: 8 Feb 2022 3:19 PM IST)
t-max-icont-min-icon

அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி கால்பந்தை வீசி வாக்கு சேகரித்தார்.

லக்னோ,

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் இந்த மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. அதன்படி உத்தர பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்றுடன் முதற்கட்ட தேர்ர்தலுக்கான் பிரச்சாரம் ஓய்கிறது. 

இந்த நிலையில், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக நேற்று மாலை அவர் மேற்கு வங்கத்தில் இருந்து லக்னோ புறப்பட்டு சென்றார். 

பிரச்சார மேடைக்கு ஏறிய மம்தா பானர்ஜி, அங்கு திரண்டிருந்த வாக்காளர்களை நோக்கி கால்பந்து ஒன்றை வீசி வாக்கு சேகரித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “சமாஜ்வாடி கட்சியை ஆதரித்து அவர்களை வெற்றிபெறச் செய்து, பாஜகவை தோற்கடிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். பாஜகவின் பொய் வாக்குறுதிகளில் மயங்கி விடாதீர்கள்... நான் வருகிற மார்ச் 3ம் தேதி வாரணாசிக்கும் செல்ல இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த வித்தியாசமான வாக்கு சேகரிக்கும் முறை, வாக்காளர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

Next Story