மத்திய படையினர் 1,439 பேர் மீது கிரிமினல் வழக்கு: மாநிலங்களவையில் தகவல்
மத்திய படையினர் 1,439 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக மாநிலங்களவையில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய மந்திரி நித்யானந்த்ராய் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் இடம் பெற்றிருந்த முக்கிய தகவல்கள்:-
* 7 மத்திய போலீஸ் படைகளில் 1,439 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
* 181 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
* அதிகபட்சமாக எல்லை பாதுகாப்பு படையினர் மீது 481 மீதும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் 273 பேர் மீதும் கிரிமினல்-ஊழல் வழக்குகளும் போடப்பட்டுள்ளன.
* வழக்குகள் போடப்பட்டுள்ளவர்களில் 71 பேர், இந்திய திபெத் எல்லை போலீசார் ஆவார்கள். அசாம் ரைபிள் படையினர் 60 பேர் மீதும், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் 7 பேர் மீதும் இத்தகைய வழக்குகள் உள்ளன.
இந்த தகவல்கள் மத்திய மந்திரி நித்யானந்த் ராய் அளித்த பதிலில் இடம்பெற்றுள்ளன.
Related Tags :
Next Story