மகளை அனாதை எனக்கூறி 11 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது - போலீசார் விசாரணை
மலப்புரம் அருகே சொந்த மகளை அனாதை என்று கூறி வியாபாரியிடம் 11 லட்சம் வரை மோசடி செய்த தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு பகுதியை சேர்ந்த வியாபாரி. அப்துல் ஹாஜி(வயது 26). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் பெண் அனாதையாக இருக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை பதிவிட்டு உள்ளார்.
இதனை அறிந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த பைஜு நசீர் மற்றும் மனைவி ராசிதா(38) தனது 2-வது மகள் போட்டோவை எடுத்துக்கொண்டு மலப்புறத்தில் உள்ள வியாபாரியை சந்தித்தனர். அவரிடம் இந்த பெண் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறி உள்ளனர்.
போட்டோவை பார்த்த வியாபாரி பெண் பிடித்து இருந்ததால் இந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்ற சம்மதம் தெரிவித்து உள்ளார். இதையொட்டி தம்பதியினர் வியாபாரியிடம் ஒரு லட்சம் முன்பணம் வாங்கிச் சென்று உள்ளனர் . பின்னர் இரண்டு வாரம் கழித்து மீண்டும் வியாபாரி சந்தித்து பணம் கேட்டுள்ளனர்.
அப்போதும் வியாபாரி 2 லட்சம் கொடுத்துள்ளார். அதனை தொடர்நது ஒரு மாதம் கழித்து மீண்டும் வியாபாரியை சந்தித்து தம்பதியினர், இன்று பெண் பார்க்கச் செல்ல வேண்டும் என்று கூறி 3 லட்சம்பெற்று சென்று உள்ளனர்
ஆனால் ஆவர்கள் பெண்ணை காட்டவில்லை. இந்த நிலையில் திருமணம் செய்ய பணம் தேவைப்படுவதாக சொல்லி இரண்டு லட்சம் மீண்டும் வாங்கி சென்றுள்ளார். பல தவணைகளில் 11 லட்சம் வரை பணம் வாங்கி கொண்டு பெண்ணை மட்டும் காட்டால் இருந்து வந்தனர்.
இதனால் சந்தேகமடைந்த வியாபாரி அப்துல் ஹாஜி, இது தொடர்பாக அரிக்கோடு போலீசில் புகார் தெரிவித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட தம்பதியினரை அழைத்து விசாரணை நடத்தியதில் பல உண்ணைகள் வெளி வந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் ஒருவர் கூறுகையில்,
தம்பதிகள் காட்டிய போட்டோவில் உள்ள பெண் இவர்களுடைய இரண்டாவது மகள் என்பதும், பணத்துக்கா சொந்த மகளையே அனாதை என்று கூறி வியாபாரியிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story