நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலம் உத்தர பிரதேசம் தான்: யோகி ஆதித்யநாத்


நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலம் உத்தர பிரதேசம் தான்: யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 12 Feb 2022 4:20 PM IST (Updated: 12 Feb 2022 4:20 PM IST)
t-max-icont-min-icon

நாம் உத்தரகாண்டையும் உத்தர பிரதேசத்தை போல் பாதுகாப்பான மாநிலமாக்க வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தார்.

லக்னோ,

உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்கு வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அங்கு இறுதிக்கட்டப் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் ஆட்சியை பிடிக்க காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன. 

அந்த வகையில், உத்தரப் பிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று தெஹ்ரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

 நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலம் உத்தர பிரதேசம் தான். நாட்டின் பாதுகாப்பில் பாஜக எந்த விதத்திலும் சமரசம் செய்யாது.  உத்தரகாண்ட் மாநிலமும் அவ்வாறு ஆக வேண்டும். இங்கு கிரிமினல்களும், ரவுடிகளும் நுழைந்துவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. நாம் உத்தரகாண்டையும் உ.பி.யைப் போல் பாதுகாப்பான மாநிலமாக்க வேண்டும். 

இந்துக்களை அவமதிப்பு செய்ய காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நடக்கிறது. தாங்கள் இந்துவா இல்லையா என்று தெரியாதவர்களே தற்போது அதற்கு அர்த்தம் கூறுகின்றனர். இந்து என  கூறிக்கொள்வதில் நாம் பெருமை கொள்ள வேண்டும் என விவேகானந்தர்  கூறினார். இந்து என்பது வகுப்பு வாத வார்த்தை கிடையாது. அது ஒரு கலாசார வார்த்தை. இந்தியாவில் உள்ள நம்பிக்கை என்னவோ அதை எதிர்ப்பதில் எப்போதும் காங்கிரஸ் கவனமாக இருக்கும். அதனால்தான் அவர்கள் ராமர் கோயிலை  கட்டுவதை எதிர்த்தனர்” என்றார். 

Next Story