ஆந்திராவில் ரூ.500 கோடி மதிப்பிலான கஞ்சா தீ வைத்து அழிப்பு


ஆந்திராவில் ரூ.500 கோடி மதிப்பிலான கஞ்சா தீ வைத்து அழிப்பு
x
தினத்தந்தி 12 Feb 2022 9:19 PM IST (Updated: 12 Feb 2022 9:19 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.500 கோடி மதிப்பிலான கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டது.

விசாகப்பட்டிணம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள கொங்கையூர் என்ற கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா தீயிட்டு அழிப்பட்டது.

பல்வேறு இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.500 கோடி மதிப்பிலான கஞ்சாவை ஆந்திர போலீசார் ஒரே இடத்தில் தீ வைத்து அழித்தனர்.

சுமார் 2 லட்சம் கிலோ எடையுள்ள கஞ்சாவை அழிக்கும் காட்சியை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story