பிப்.14 முதல் கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம் - பீகார் அரசு அறிவிப்பு


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI

பிப்ரவரி 14 முதல் கொரோனா தொடர்பாக மாநிலத்தில் அமலில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக பீகார் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் பீகாரில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை அம்மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 1,346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பீகாரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்து வருவதால் பிப்ரவரி 14-ம் தேதி முதல் பீகாரில் அமலில் உள்ள அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story