அரசியல் வன்முறையால் கேரளா பாதுகாப்பற்றது; உ.பி.யில் 5 ஆண்டுகளாக கலவரம் இல்லை - யோகி ஆதித்யநாத்


அரசியல் வன்முறையால் கேரளா பாதுகாப்பற்றது; உ.பி.யில்  5 ஆண்டுகளாக கலவரம் இல்லை - யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 14 Feb 2022 3:48 PM IST (Updated: 14 Feb 2022 3:48 PM IST)
t-max-icont-min-icon

அரசியல் வன்முறையால் கேரளா பாதுகாப்பற்றது, உ.பி.யில் கடந்த 5 ஆண்டுகளாக கலவரம் நடக்கவில்லை என யோகி ஆதித்யநாத் கூறினார்.

லக்னோ

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 5 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் உத்தரபிரதேசத்தில் எந்தவொரு கலவரமும் ஏற்படவில்லை.

ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் வளர்ச்சிக்காக பா.ஜனதா அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. எங்களது ஆட்சியில் 80 சதவீத பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். 20 சதவீதம் பேர்தான் எல்லாவற்றையும் எதிர்ப்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.உத்தரபிரதேசத்தில் நடந்த முதல் கட்ட தேர்தலுக்கு பிறகு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.

எக்ஸ்பிரஸ் சாலை, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற திட்டத்துக்குக்கூட அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உத்தரபிரதேசத்தில் நடந்த முதல் கட்ட தேர்தலுக்கு பிறகு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும் பொதுமக்கள் ஆசியுடன் இரட்டை என்ஜின் ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. பொருளாதார மேம்பாடு மற்றும் ஏழைகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

இந்தியாவின் அரசியலை பிரதமர் மோடி மாற்றி அமைத்து அமைத்துள்ளார். சாதி, மதம், குடும்பம் என்ற அரசியலுக்கு பதிலாக வளர்ச்சி, நல்லாட்சி, கிராமங்களின் முன்னேற்றம், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் முன்னேற்றத்துக்காக அவர் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை வகுத்து அதன் படி உத்தரபிரதேசத்தில் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன.

பா.ஜனதாவின் இந்த அர்ப்பணிப்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வருவதில் எந்த மாற்றமும் இல்லை.

காங்கிரசை அழிக்க ராகுல்காந்தியும் பிரியங்காவும் போதும் என்றும், வேறு யாரும் தேவையில்லை 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story