அமலாக்கத்துறைக்கு பயந்து நாராயண் ரானே பா.ஜனதாவில் சேர்ந்தார்: சிவசேனா எம்.பி
அமலாக்கத்துறைக்கு பயந்து நாராயண் ரானே பா.ஜனதாவில் சேர்ந்ததாக சிவசேனா எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.
நாராயண் ரானே
மத்திய மந்திரி நாராயண் ரானே நேற்று முன்தினம், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆவண ஆதாரங்கள் இன்றி பா.ஜனதா தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவதாக கூறியிருந்தார். மேலும் சஞ்சய் ராவத் சிவசேனா தலைவர் பதவி மீது கண் வைப்பதாகவும் பேசியிருந்தார். நாராயண் ரானே முதலில் சிவசேனா கட்சியில் இருந்தார். அங்கு இருந்த போது முதல்-மந்திரியாகவும் இருந்தார்.
பின்னர் காங்கிரசில் சேர்ந்து மந்திரியானார். தற்போது பா.ஜனதாவில் இணைந்து மத்திய மந்திரியாக உள்ளார்.
பயந்து பா.ஜனதாவில் சேர்ந்தார்
இந்தநிலையில் நாராயண் ரானேவின் பேச்சு குறித்து சிவசேனா தலைவர் விநாயக் ராவத் எம்.பி. கூறியிருப்பதாவது:-
கிரித் சோமையா, நாராயண் ரானே மீதும் பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததும் இதில் அடங்கும். இதையடுத்து அமலாக்கத்துறை ஷெல் கம்பெனிகள் குறித்து விசாரணை நடத்தியது.
எனவே நாராயண் ரானே பயந்து பா.ஜனதாவில் சேர்ந்தார். நாராயண் ரானேவுக்கு எதிரான ஆதாரங்களை கிரித் சோமையா மீண்டும் அமலாக்கத்துறையில் தாக்கல் செய்வார் என்றும், அந்த புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். காங்கிரசில் இருந்த போது நாராயண் ரானே மோடிக்கு எதிராக பேசினார். தற்போது பா.ஜனதாவுக்கு ஆதரவாக பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story