தானே- திவா இடையே புதிதாக 2 ரெயில் பாதைகள் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
தானே - திவா இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 ரெயில் பாதைகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
மும்பை,
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கல்யாண் முக்கியமான சந்திப்பு ரெயில் நிலையமாக உள்ளது. இதில் கல்யாண் - சி.எஸ்.எம்.டி. இடையே 4 ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதையில் ஸ்லோ மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற 2 பாதையில் விரைவு மின்சார ரெயில்களுடன், எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
பெரும்பாலான நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில், நீண்ட தூர ரெயில்களால் மின்சார ரெயில்களை தாமதமாக இயக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இதை தடுக்கும் வகையில் தானே - திவா இடையே ரூ.620 கோடி செலவில் கூடுதலாக 2 வழிப்பாதைகள் அமைக்கும் பணி முடிந்து உள்ளது.
இந்த திட்டத்தில் 1.4 கி.மீ. நீள ரெயில்வே மேம்பாலம் (பிளை ஒவர்), 3 பெரிய பாலங்கள், 21 சிறிய பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ரெயில் பாதைகளை இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். மாலை 4.30 மணிக்கு தொடங்கும் விழாவில் மோடி 2 மின்சார ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
Related Tags :
Next Story