பெங்களூருவில் 200 க்கும் மேற்பட்ட சிக்னல் பேட்டரிகளை திருடிய தம்பதி..!
பெங்களுருவில் 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல் பேட்டரிகளை திருடிய தம்பதி கைது செய்யயப்பட்டுள்ளனர்.
பெங்களுருவில் 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல் பேட்டரிகளை திருடிய தம்பதி கைது செய்யயப்பட்டுள்ளனர்.பெங்களூரு முழுவதும் ,சில மாதங்களாக போக்குவரத்து சிக்னல் பேட்டரி திருட்டுகள் அதிகரித்து வந்தது , இந்த திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க தொடர்ந்து போலீசார் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்
இந்நிலையில் இது தொடர்பாக கணவன்-மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூன் 2021 மற்றும் ஜனவரி 2022 க்கு இடையில் நகரம் முழுவதும் உள்ள 68 போக்குவரத்து சந்திப்புகளில் இருந்து 230 க்கும் மேற்பட்ட பேட்டரிகளை திருடியுள்ளனர் ,
பெங்களூரு , சிக்கபனாவரத்தைச் சேர்ந்த எஸ் சிக்கந்தர் 30, மற்றும் அவரது மனைவி நஸ்மா சிக்கந்தர் 29, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 230க்கும் மேற்பட்ட பேட்டரிகளை திருடி, கிலோ 100 ரூபாய்க்கு விற்றதாக ,என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story