மராட்டியத்தில் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கூடுதலாக 36 மின்சார ரெயில் சேவை
மராட்டிய மாநிலத்தில் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கூடுதலாக 36 மின்சார ரெயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மத்திய ரெயில்வேயில் மின்சார ரெயில்கள் காலை, இரவு நேரங்களில் அதிக கூட்ட நெரிசலுடன் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக மத்திய ரெயில்வே மெயின் வழித்தடத்தில் கூடுதலாக 36 மின்சார ரெயில் சேவைகள் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தானே - திவா இடையே 5, 6-வது வழிப்பாதையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து கூடுதல் ரெயில் சேவையை மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது. புதிய சேவைகள் மூலம் மராட்டிய மாநிலத்தின் மத்திய ரெயில்வே மெயின் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 894 ஆக அதிகரித்து உள்ளது. ஒட்டுமொத்தமாக துறைமுகம், டிரான்ஸ்ஹார்பர் மற்றும் மெயின் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 1,774-யில் இருந்து 1,810 ஆக அதிகரித்து உள்ளது.
இதேபோல ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கையும் 10-ல் இருந்து 44 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 25 சேவைகள் விரைவு ரெயிலாக இயக்கப்பட உள்ளது. கூடுதலாக இயக்கப்படும் ரெயில் சேவைகள் அடங்கிய கால அட்டவணையை பயணிகள் இந்திய ரெயில்வே இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story