சிவசேனா என்னை வேட்டையாடுகிறது: நாராயண் ரானே


சிவசேனா என்னை வேட்டையாடுகிறது: நாராயண் ரானே
x
தினத்தந்தி 20 Feb 2022 2:15 AM IST (Updated: 20 Feb 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

பங்களாவுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில் சிவசேனா என்னை வேட்டையாடுவதாக நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.

நோட்டீஸ்

மராட்டியத்தில் பா.ஜனதா, சிவசேனா தலைவர்களுக்கு இடையே சமீபநாட்களாக வார்த்தை போர் நடந்து வருகிறது. குறிப்பாக மத்திய மந்திரி நாராயண் ரானே, கிரித் சோமையா போன்றவர்கள் சிவசேனாவை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.

இந்தநிலையில் மும்பை ஜூகு பகுதியில் நாராயண் ரானேவுக்கு சொந்தமான பங்களா வீட்டில் சட்டவிரோத கட்டுமானம் நடந்ததாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதில் வீட்டை அளவீடு செய்யவும், புகைப்படம் எடுக்கவும் அதிகாரிகள் வர உள்ளதாகவும், கடைசியாக அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தின் திட்டத்துடன் உரிமையாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயண் ரானே கூறியதாவது:-

நடிகர் கொலை

நான் இருக்கும் பங்களாவில் அனைத்து கட்டிட விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளது.

கட்டிடம் முடிக்கப்பட்டதிலிருந்து ஒரு அங்குலம் கூட மாற்றி கட்டப்படவில்லை. ஏனெனில் அதற்கான தேவை ஏற்படவில்லை. சிவசேனா பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. நான் வேட்டையாடப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுமட்டும் இன்றி தனது செய்தியாளர் சந்திப்பில் போது, “இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் அவரது முன்னாள் மேலாளர் திஷா சாலியன் கொலை செய்யப்பட்டதாகவும், கொல்லப்பட்டுவதற்கு முன்பு திஷா சாலியன் கற்பழிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் இதற்கான ஆதாரம் எதையும் அவர் வழங்கவில்லை.


Next Story