உத்தரபிரதேசத்தில் 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!


உத்தரபிரதேசத்தில் 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!
x
தினத்தந்தி 20 Feb 2022 7:17 AM IST (Updated: 20 Feb 2022 7:20 AM IST)
t-max-icont-min-icon

உ.பி.யில் 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் இரண்டு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், இன்று மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி, உ.பி.யில் 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது

இந்த மூன்றாம் கட்ட தேர்தலில் மொத்தம்  2.15 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் போட்டியிடும் 245 பேருக்கு ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன.

இந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் சமாஜ்வாடி கட்சி சார்பில் 52,  பாஜக சார்பில் 48 பேரும் உள்ளனர்.பகுஜன் சமாஜ் சார்பில் 46,  காங்கிரஸ் சார்பில் 29,   ஆம் ஆத்மி சார்பில் 18 பேரும் பட்டியலில் உள்ளனர்.

முதல் மந்திரி வேட்பாளரான அகிலேஷ் யாதவ் போட்டியிடும் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று இந்த 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் நடைபெறுகிறது.

Next Story