பழைய வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற டெல்லி அரசு முடிவு
டெல்லி அரசின் எலெக்ட்ரிக் வாகனக் கொள்கையின் கீழ் 2,000 பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி
தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவின்படி, டெல்லியில் 10 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காற்று மாசுபாட்டிற்கு எதிராக போராடும் வகையில் டெல்லி அரசு, அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் உள்ள பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை ரத்து செய்துவிட்டு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கத் தொடங்கியுள்ளது.
டெல்லி அரசின் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக 12 எலெக்ட்ரிக் வாகனங்களை பொது நிர்வாகத் துறை (ஜிஏடி) சமீபத்தில் வாங்கியுள்ளது.
இதுகுறித்து, டெல்லி அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவின்படி, டெல்லியில் முறையே 10 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயுட்காலம் முடிந்த அத்தகைய வாகனங்களை அடையாளம் கண்டு ஸ்கிராப்பிங்கிற்கு அனுப்புவதற்கான செயல்முறையையும் அரம்பித்துள்ளோம், பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை ரத்து செய்துவிட்டு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கத் தொடங்கியுள்ளோம்" என்று கூறினார்.
டெல்லி அரசின் எலெக்ட்ரிக் வாகனக் கொள்கையின் கீழ் 2,000 பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story