உத்தரபிரதேசத்தில் நாளை 4-ம் கட்ட தேர்தல்..!
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
லக்னோ,
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் 59 தொகுதிகளுக்கான 4-வது கட்ட தேர்தல் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் 624 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.
லக்னோ, ரேபரேலி, லகிம்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெறும் இந்த 4-வது கட்ட தேர்தலுக்கான சூறாவளி பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதனையடுத்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த தேர்தலில் 59 தொகுதிகளில் பா.ஜ.க. 51 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 4 தொகுதிகளிலும், 3 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும், பா.ஜ.க. கூட்டணி கட்சியான அப்னா தல் (சோனாலால்) கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தன.
Related Tags :
Next Story