குஜராத்; பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்களுக்கு எதிர்ப்பு!
குஜராத் பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விசுவ இந்து பரிஷத் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
சூரத்,
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் சில இளம்பெண்கள் ஹிஜாப் அணிந்து உள்ளே சென்றனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காவி துண்டு அணிந்த விசுவ இந்து பரிஷத் தொண்டர்கள் சிலர், பள்ளி வளாகத்தில் திரண்டனர். அப்பெண்களுக்கு எதிராக கோஷமிடத் தொடங்கினர்.
அதே சமயத்தில் பள்ளி முதல்வர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்தனர். விசுவ இந்து பரிஷத் தொண்டர்கள் 12 பேரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கூட்டி சென்றனர்.
ஹிஜாப் அணிந்து வந்தவர்கள், அந்த பள்ளியின் மாணவிகள் அல்ல என்றும், அங்கு போட்டி தேர்வு எழுத வந்த பெண்கள் என்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். தேர்வு எழுதியவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story