‘நீங்கள் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது’ ராகுல் காந்தியை கிண்டல் செய்த பாஜக!


‘நீங்கள் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது’ ராகுல் காந்தியை கிண்டல் செய்த பாஜக!
x
தினத்தந்தி 23 Feb 2022 12:41 PM IST (Updated: 23 Feb 2022 3:58 PM IST)
t-max-icont-min-icon

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ‘நீங்கள் ஒருபோதும் தமிழகத்தை ஆள மாட்டீர்கள்’ என்று ராகுல் காந்தியை பாஜக கிண்டல் செய்துள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாது என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சமீபத்திய நாடாளுமன்ற உரையை பாஜக கிண்டல் செய்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க., தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு ஒதுக்கீடு பிரச்சினை காரணமாக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டது.

நேற்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில், தமிழகம் முழுவதும் 308 வார்டுகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதில் 230 டவுன் பஞ்சாயத்து வார்டுகள், 56 முனிசி பாலிட்டி வார்டுகள் மற்றும் 22 மாநகராட்சி வார்டுகள் அடங்கும்.20க்கும் மேற்பட்ட வார்டுகளில் திமுகவுக்கு அடுத்தபடியாக பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இதன் மூலம் திமுக, அதிமுக கூட்டணிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் பாஜகவின் அமித் மாளவியா ராகுல் காந்தியை கிண்டல் செய்து இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஆட்சி செய்யாது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தீர்க்கதரிசனம் கூறினார். தேர்தல் முடிவுகள் அவரது கருத்துகளை பொய்யாக்கியிருக்கும் என்று நம்புகிறேன். திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் பாஜக தற்போது 3வது பெரிய கட்சியாக உள்ளது. இதுவரை வெற்றி பெறாத பகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது” என பதிவிட்டுள்ளார்


Next Story