இளம் மேதை பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம்- பிரதமர் மோடி


இளம் மேதை பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம்- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 23 Feb 2022 3:31 PM IST (Updated: 23 Feb 2022 3:31 PM IST)
t-max-icont-min-icon

உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை பிரதமர் மோடி பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை பிரதமர் மோடி பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ இளம் மேதை பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். செஸ் சாம்பியன் கார்ல்சனுக்கு எதிரான பிரக்ஞானந்தா வெற்றி பெற்றது பெருமை அளிக்கிறது. திறமை மிகுந்த பிரக்ஞானந்தாவின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா..

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. 16 வீரர்கள் இதில் பங்கேற்றனர். இந்த போட்டியின் 8-வது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.

கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39-ஆவது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார். உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனைத் தோற்கடித்ததால் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

Next Story