உக்ரைனில் வாழும் இந்தியர்களுக்கான வழிகாட்டுதல்கள் - இந்திய தூதரகம் வெளியீடு


உக்ரைனில் வாழும் இந்தியர்களுக்கான வழிகாட்டுதல்கள் - இந்திய தூதரகம் வெளியீடு
x
தினத்தந்தி 27 Feb 2022 5:04 AM IST (Updated: 27 Feb 2022 5:04 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் உள்ள இந்திய அதிகாரிகளுக்கு தெரியாமல் எந்தவொரு இந்தியரும் எல்லைப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ரஷியாவின் படையெடுப்பால் சின்னாபின்னமாகி வரும் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அருகில் உள்ள நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் வசித்து வரும் இந்தியர்கள், தங்களுக்கு முன்னறிவிப்பு கொடுக்காமல் எல்லை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில், ‘உக்ரைனின் கிழக்கு பகுதியில் தங்கியிருப்பவர்கள் அடுத்தகட்ட அறிவிப்பு வரும்வரை தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே இருக்க வேண்டும். வீடுகளுக்கு உள்ளேயோ அல்லது பாதுகாப்பு முகாம்களிலோ கிடைக்கும் உணவு, தண்ணீரை பெற்றுக்கொண்டு முடிந்தவரை அமைதியாக இருங்கள்’ என்று கூறப்பட்டு உள்ளது.

தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மீண்டும் அறிவுறுத்துவதாக கூறியுள்ள தூதரகம், தங்கள் சுற்றுப்புறங்களில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டு உள்ளது.

உக்ரைனில் உள்ள இந்திய அதிகாரிகளுக்கு தெரியாமல் எந்தவொரு இந்தியரும் எல்லைப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

Next Story