மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீடீர் தீ விபத்து..!


மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீடீர் தீ விபத்து..!
x
தினத்தந்தி 28 Feb 2022 8:43 PM IST (Updated: 28 Feb 2022 8:43 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் உள்ள 11 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை,

மும்பையின் காஞ்சூர்மார்க்கில் உள்ள என்.ஜி ராயல் பார்க் பகுதியில் 11 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

முன்னதாக 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் இன்று மதியம் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து 2-ம் நிலை தீ விபத்து என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story