ஆரோக்கிய வனத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
சுமார் 6.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆரோக்கிய வனம் மனித வடிவில் யோகா முத்திரையில் அமர்ந்து இருப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ஜனாதிபதி மாளிகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வனத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். சுமார் 6.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆரோக்கிய வனம் மனித வடிவில் யோகா முத்திரையில் அமர்ந்து இருப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆயுர்வேதத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 215 மூலிகைகளும், தாவரங்களையும் கொண்டுள்ளது.
மேலும், ஆரோக்கிய வனத்தில் நீருற்றுகள், யோகா மேடை, நீர் கால்வாய், தாமரை குளம் மற்றும் காணும் இடம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேத தாவரங்களின் முக்கியத்துவத்தையும் அதன் நன்மைகளையும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கத்தில் ஆரோக்கிய வனம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. ஆரேக்கிய வனத்தை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story