உக்ரைனில் இருந்து வெளியேற இந்திய கொடியுடன், பாரத் மாதா கீ ஜே கோஷம் எழுப்பும் பாகிஸ்தானியர்
பாதுகாப்புக்காக இந்திய கொடி, பாரத் மாதா கீ ஜே கோஷம் எழுப்பி உக்ரைனில் இருந்து பாகிஸ்தானியர் வெளியேறி வருகின்றனர்.
புதுடெல்லி,
ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர். மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு சென்ற விமானங்களில் ‘முதல் விமானம்’ கடந்த 26-ஆம் தேதி பிற்பகல் 1.55 மணியளவில் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 உக்ரைன்வாழ் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா வந்தடைந்தது.
தொடர்ந்து ‘இரண்டாவது விமானம்’ 26-ஆம் தேதி இரவு வந்தடைந்தது. இந்நிலையில் உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 240 இந்தியர்களுடன் ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டுவில் இருந்து புறப்பட்ட ‘மூன்றாவது விமானம்’ கடந்த 27 ஆம் தேதி காலை 10 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது.
அதே போல் கடந்த 27 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில், உக்ரைனில் சிக்கி தவித்த இந்திய மாணவர்களை மீட்கச் சென்ற சிறப்பு விமானம் பத்திரமாக டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கியது. அதில் உக்ரைனில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர்.
தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து உள்ளதால் உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் இந்தியாவின் மீட்புப் பணியை உலகமே வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய தேசிய கொடிகளை உயர்த்தி, அச்சமின்றி எல்லையை நோக்கிச் செல்லுமாறு குடிமக்களை இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.ரஷியாவுடனான இந்தியாவின் உறவு, அத்தகைய மீட்புப் பணியை சாத்தியமாக்கியுள்ளது என்று நம்பப்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் சிக்கித் தவிக்கும் தனது மாணவர்களை பாகிஸ்தான் அரசு கைவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு எதையும் செய்யவில்லை
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது. நிலைமை சீரானதும் எல்லையை நோக்கி செல்லுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக பாகிஸ்தான் மாணவர்கள், இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நபர், இந்த உண்மையை பகிரங்கமாக கூறியுள்ளார். இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தினால் உக்ரைனில் இருந்து எவ்வித தாக்குதலும் இன்றி பாதுகாப்பாக வெளியேற முடியும் என்பதால் பாகிஸ்தான் மாணவ, மாணவியர் இந்திய தேசியக் கொடியை அசைத்து, பாரத மாதா கீ ஜே என்ற உரக்க கூறி வருகின்றனர்.
பாகிஸ்தான் தொடர்பான செய்திகளை அதிகம் தெரிவிக்கும் இந்துஸ்தான் ஸ்பெஷல் யூடியூப் சேனல், பிப்ரவரி 27 அன்று ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது, அதில் ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர், உக்ரைனில் உள்ள பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியக் கொடியை எப்படி பயன்படித்தினார்கள் என்பதை வெளிப்படுத்தி உள்ளார்.
உக்ரைனில் உள்ள மெட்ரோ சுரங்கப்பாதைகளில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானிய மாணவர்களின் கணக்குகளையும் இந்துஸ்தான் ஸ்பெஷல் வெளியிட்டு உள்ளது. பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து யாரும் தங்களைக் காப்பாற்ற வராததால், உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அங்கேயே சிக்கித் தவிப்பதாக வேதனையில் இருக்கும் மாணவர்கள் கூறுவதைக் கேட்க முடிகிறது. பாகிஸ்தான் அரசாங்கத்தை கடுமையாக சாடிய மாணவர் ஒருவர், “அனைத்து மாணவர்களையும் வெளியேற்றிவிட்டதாக தூதரகம் பொய் சொல்கிறது. ஆனால் நாங்கள் அனைவரும் இங்கே அமர்ந்திருக்கிறோம். அனைத்து நாடுகளும் தங்கள் மக்களை வெளியேற்றுகின்றன, ஆனால் பாகிஸ்தான் கவலைப்படவில்லை என கூறி உள்ளார்.
Pakistani student using indian flag to come out of ukraine... Thats power of our india and Modiji... Watch till the end.#indianstudentsinukraine#nuclearwarpic.twitter.com/dBVp4Dj4xe
— Jay (@PoojaraJaydeep) February 28, 2022
Related Tags :
Next Story