மராட்டியத்தில் 70 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளதாக கவர்னர் தகவல்


மராட்டியத்தில் 70 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளதாக கவர்னர் தகவல்
x
தினத்தந்தி 4 March 2022 6:38 AM IST (Updated: 4 March 2022 6:38 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 70 சதவீதம் பேர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என சட்டசபையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உரையாற்றினார்.

மும்பை,

சட்டசபை கூட்டு கூட்டத்தில் நேற்று உரையாற்ற வந்த கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், தனது உரையை முடிக்காமல் இடையிலேயே கவர்னர் வெளியேறி விட்டார்.

இதையடுத்து கவர்னர் மாளிகை, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் உரையை வெளியிட்டது. இதில், கெரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விவரிக்கப்பட்டு இருந்தது. மேலும் முதல் டோஸ் தடுப்பூசியை தகுதியுள்ள 91 சதவீதத்தினரும், முழுமையான தடுப்பூசியை தகுதியுள்ள 70 சதவீதத்தினரும் போட்டுக்கொண்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

கொரோனாவால் தாய், தந்தை என இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அரசால் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கவர்னரின் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story