இந்தியாவில் 6 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,921 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு.
புதுடெல்லி,
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 6,396 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,921 ஆயிரமாக குறைந்தது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 477 ஆக உயர்ந்தது.கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 878 ஆக குறைந்தது.
நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றில் இருந்து 11 ஆயிரத்து 651 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரையில் இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 78 ஆயிரத்து 721 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு சற்று உயர்ந்தது. நேற்று 201 பேர் இந்த தொற்றால் உயிரிழந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 289 ஆக உயர்ந்தது. இதுவரை இந்த தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 878 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மொத்தம் இதுவரை 1,78,55,66,940 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24 லட்சத்து 62 ஆயிரத்து 562 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.
Related Tags :
Next Story