மேலும் 13 விமானங்கள் மூலம் சுமார் 2,500 இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர் - மத்திய மந்திரி ஜெய்சங்கர்


மேலும் 13 விமானங்கள் மூலம் சுமார் 2,500 இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர் - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
x
தினத்தந்தி 5 March 2022 5:45 PM GMT (Updated: 5 March 2022 5:45 PM GMT)

மேலும் 13 விமானங்கள் மூலம் சுமார் 2,500 இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளதாக மத்திய மந்திரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர்.  மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.  

இவ்வாறு சென்ற விமானங்களில் ‘முதல் விமானம்’ கடந்த 26-ஆம் தேதி  பிற்பகல் 1.55 மணியளவில் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 உக்ரைன்வாழ் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா வந்தடைந்தது. தொடர்ந்து ‘இரண்டாவது விமானம்’  26-ஆம் தேதி இரவு வந்தடைந்தது. இந்நிலையில் உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 240 இந்தியர்களுடன் ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டுவில் இருந்து புறப்பட்ட  ‘மூன்றாவது விமானம்’ கடந்த 27 ஆம் தேதி காலை 10 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது. 

தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து உள்ளதால் உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 

இந்நிலையில் ஆபரேஷன் கங்காவின் கீழ் மேலும் 13 விமானங்கள் இன்று சுமார் 2,500 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வரவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

Next Story