ஜம்மு காஷ்மீர்: பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி, ஒருவர் காயம்


ஜம்மு காஷ்மீர்: பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி, ஒருவர் காயம்
x
தினத்தந்தி 5 March 2022 11:58 PM IST (Updated: 5 March 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் 5 பேர் பலியாகினர்.

ஸ்ரீநகர்,

பஞ்சாப்பிலிருந்து ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் 5 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, பஞ்சாப்பிலிருந்து ஸ்ரீநகருக்கு 6 பேர் காரில் சென்றனர். அப்போது ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து கார் சாலையிலிருந்து விலகி பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Next Story