ரஷியாவின் ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசிக்கு 3-ம் கட்ட பரிசோதனை: அனுமதி வழங்க பரிந்துரை
ரஷியாவின் ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசிக்கு 3-ம் கட்ட பரிசோதனைக்கான அனுமதி வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ரஷியா 'ஸ்புட்னிக் லைட்' என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி தற்போது அர்ஜெண்டினா, ரஷியா உள்பட 29 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்து. இந்த தடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் தயாரித்து வினியோகிக்க ரஷியாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
இந்த தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த மாதம் 4-ந் தேதி வழங்கியது. தற்போது, இந்த தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக பயன்படுத்துவதற்கு 3-ம் கட்ட பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திடம் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.
இதைப்பரிசீலித்த தொழில்நுட்ப வல்லுனர் குழு, ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி வழங்கலாம் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
Related Tags :
Next Story