டெல்லி: தகராறில் ஈடுபட்ட நபரை கத்தியால் குத்திய சிறுவன்..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 March 2022 5:56 AM IST (Updated: 7 March 2022 6:01 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு டெல்லியில் சிக்னேச்சர் பாலம் அருகே தகராறில் ஈடுபட்ட நபரை கத்தியால் குத்திய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

பிப்ரவரி 6 ஆம் தேதி வடகிழக்கு டெல்லியில் உள்ள சிக்னேச்சர் பாலம் அருகே நடந்த சண்டையைத் தொடர்ந்து 19 வயது இளைஞரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் 17 வயது சிறுவன் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 மேலும் சண்டையில் காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார். இறந்த ராம்ஜானி என்ற அந்த நபரின் முதுகில் இரண்டு கத்திக் காயங்கள் உள்ளன. அவர் சண்டையில் ஈடுபட்ட போது காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வடகிழக்கு டிசிபி சஞ்சய் குமார் கூறுகையில், “சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். சாமி சிலையை கரைப்பதற்காக தனது நண்பர்களுடன் யமுனா காட் பகுதிக்கு சென்ற சிறுவன், அவனுடன் சமையலறைக் கத்தியை எடுத்துச் சென்றான். ராம்ஜானி மற்றும் அபிஷேக் மற்றவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவன் குறுக்கிட முயன்றபோது அவர்களால் தாக்கப்பட்டான். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் ராம்ஜானியை கத்தியால் குத்தினான்” என்று கூறினார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story