காஷ்மீர்: பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு தாக்குதல் - 2 பேர் பலி


காஷ்மீர்: பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு தாக்குதல் - 2 பேர் பலி
x
தினத்தந்தி 7 March 2022 4:20 AM GMT (Updated: 2022-03-07T09:50:49+05:30)

காஷ்மீர் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹரி சிங் ஹை சாலையில் அமைந்துள்ள அமீரா ஹடல் என்ற மார்க்கெட் பகுதியில் மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் போலீசார், பொதுமக்கள் என 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொதுமக்களில் ஒரு நபர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒரு நபர் இன்று உயிரிழந்துள்ளார். 

Next Story