ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளால் கிராம தலைவர் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளால் கிராம தலைவர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 9 March 2022 8:52 PM IST (Updated: 9 March 2022 8:52 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் கிராம தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் கிராம தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான கன்மோ பகுதியை சேர்ந்த சமீர் அகமது பட் என்பவர் மீது இன்று மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அகமது பட், உயிரிழந்தார்.  ஜம்மு காஷ்மீரில் ஒரே வாரத்தில் கொல்லப்படும் 2-வது கிராமத் தலைவர் இவர் ஆவார்.  

ஜம்மு காஷ்மீரின் உதாம்பூர் டவுனில் வெடிகுண்டு தாக்குதல்  நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே, பயங்கரவாதிகள் கிராம தலைவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். 

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகரில் மார்க்கெட் ஒன்றில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 38 பேர் காயம் அடைந்தனர். 


Next Story