பெண்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்! - மராட்டிய மாநில பாஜக தலைவர்
மராட்டிய மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் பாஜகவின் முன்னிலை நிலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை,
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. 245 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதல் இடத்தில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 96 இடங்களை பெற்று 2வது இடத்தில் உள்ளது.
கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜகவும், 12 தொகுதிகளில் காங்கிரசும், 2 தொகுயில் ஆம் ஆத்மியும், மற்ற கட்சிகள் 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 42 தொகுதிகளில் பாஜகவும், 24 தொகுதிகளில் காங்கிரசும், மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 31 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 7 இடத்திலும், தேசிய மக்கள் கட்சி 10 இடங்களிலும் மற்றவை 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதைய நிலவரம், பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் என்பதை காட்டுகிறது.
5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், மராட்டிய மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் பாஜகவின் முன்னிலை நிலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, “தேர்தல் முடிவுகளை குறித்து, ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக நான் கருத்து கூறமாட்டேன். ஆனால் இப்போதைய நிலவரம், பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் என்பதை காட்டுகிறது.
அனைத்து பெண்களும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். ஆண்கள் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்.
பாஜகவை தோற்கடிப்பது என்பது உங்கள் தலையை சுவற்றில் இடித்துக்கொள்வது போன்றது” என்று மராட்டிய மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கருத்து தெரிவித்தார்.
I won't comment on results, as a matured political leader; but early trends show that BJP will come in 4 states. All women must have voted for BJP &men might've voted for SP (in UP). Defeating BJP is equivalent to banging your head on a wall:BJP Maharashtra pres Chandrakant Patil pic.twitter.com/GmjPFqiOpL
— ANI (@ANI) March 10, 2022
Related Tags :
Next Story