ஊழலை அம்பலப்படுத்தியதால் அரசு அழுத்தம் கொடுக்கிறது - தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு


ஊழலை அம்பலப்படுத்தியதால் அரசு அழுத்தம் கொடுக்கிறது - தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 March 2022 12:59 AM IST (Updated: 13 March 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

ஊழலை அம்பலப்படுத்தியதால் அரசு தனக்கு அழுத்தம் கொடுப்பதாக தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

மும்பை,

தொலைபேசி ஒட்டு கேட்பு வழக்கில் தேவேந்திர பட்னாவிசுக்கு மும்பை போலீசார் நேற்று நோட்டீஸ் அனுப்பினர். இது குறித்து தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்து கூறியதாவது;- 

“மும்பை பி.கே.சி. சைபர் கிரைம் போலீசார் எனக்கு விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மகாவிகாஸ் அகாடி அரசை அம்பலப்படுத்தியதற்காக எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த (தொலைபேசி ஒட்டுகேட்பு) வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். 

இந்த வழக்கை மாநில அரசால் சரியாக விசாரிக்க முடியாது. காவல்துறை பணியிடமாற்றத்தில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தியதால் மாநில அரசு எனக்கு அழுத்தம் கொடுக்கிறது. என்னிடம் மேலும் பல ஆதாரங்கள் உள்ளது. அதை நான் சி.பி.ஐ.யிடம் மட்டும் தான் ஒப்படைப்பேன். நாளை (இன்று) மும்பை போலீசாரின் விசாரணைக்கும் ஒத்துழைப்பேன். மாநில அரசும், காவல்துறையும் பதற்றத்தில் உள்ளதால் எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story