பஸ்சில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
பஸ்சில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டம் குக்ஷி நகரில் இருந்து மனவர் என்ற பகுதி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனியார் பஸ் பயணித்தது. அந்த பஸ்சில் சில பயணிகள் பயணித்தனர். அதில், ஒரு பெண் லாங்சாரி என்ற பகுதியில் இறங்குவதற்கு டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால், அந்த குறிப்பிட்ட இடத்தில் பஸ் நிற்காமல் சென்றது.
இது குறித்து பஸ்சில் பயணித்த சக பயணிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த பெண்ணை காந்த்வானி பகுதியில் இறக்கி விடுவதாக பஸ் டிரைவர் மற்றும் கண்டெக்டர் கூறியுள்ளனர். இதனை சக பயணிகளும் நம்பியுள்ளனர். பின்னர் பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில், அந்த பெண் மட்டும் பஸ்சில் தனியாக பயணித்துள்ளார்.
அப்போது, குலாட்டி - பலிபூர் சாலையில் உள்ள ஒரு ஒதுக்குப்புரமான பகுதிக்கு டிரைவர் பஸ்சை கொண்டு சென்றுள்ளார். அங்கு வைத்து பஸ்சில் தனியாக பயணித்த அந்த பெண்ணை பஸ் கண்டெக்டர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர், பஸ் டிரைவர் மற்றும் கிளினர் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த முயற்சித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த சிலர் விரைந்து வந்து பாலியல் வன்கொடுமை செய்த பஸ் டிரைவரை பிடித்தனர். ஆனால், பஸ் கண்டெக்டர், கிளினர் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
பின்னர், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டுள்ளார். மேலும், நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பஸ்சில் பெண் பயணியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பஸ் டிரைவரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய கண்டெக்டர் மற்றும் கிளினரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story