பட்ஜெட் தொடர்: கூடுதலாக 19 மணி நேரம் செயல்படும் மாநிலங்களவை..!!
பட்ஜெட் தொடரின் 2-வது பாதியில் மாநிலங்களவை கூடுதலாக 19 மணி நேரம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பாதி ஒரு மாத இடைவேளைக்குப்பின் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடரின்போது இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.
இதில் மாநிலங்களவை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இடையில் மதிய உணவு இடைவேளை 1 மணி நேரம் விடப்படுகிறது.
பட்ஜெட் தொடரின் முதல் பாதியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாநிலங்களவை இயங்கியது. ஆனால் 2-வது பாதியில் 11 மணி முதல் 6 மணி வரை நடைபெறுவதால் உணவு இடைவேளை போக நாள்தோறும் 1 மணி நேரம் கூடுதலாக கிடைக்கிறது.
இந்த 2-வது பாதியில் 19 அமர்வுகள் நடைபெறுகிறது. இதன் மூலம் 19 மணி நேரம் கூடுதலாக கிடைக்கும் என மாநிலங்களவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தொடரில் 4 நாட்கள் தனிநபர் அலுவல்கள், தினசரி 1 மணி நேர கேள்வி நேரம், 1 மணி நேர பூஜ்ஜிய நேர அலுவல்கள் போன்றவை இடம்பெறும் எனவும் மாநிலங்களவை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
Related Tags :
Next Story