திருமணத்தை இப்படியுமா கொண்டாடுவீர்கள்..! வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மணப்பெண்
மணப்பெண் தன் திருமணத்தை கொண்டாடும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
மும்பை,
வட இந்திய மாநிலங்களில் நடைபெறும் பிரம்மாண்ட திருமண நிகழ்ச்சிகளின் போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவது என்பது சர்வ சாதாரண விஷயமாகும்.
இதுபோன்ற பாரம்பரிய நிகழ்வுகள் சட்டவிரோதம் என்றாலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏனெனில் இதுபோன்ற சம்பவத்தால், எதிர்பாராத விதமாக சில உயிரிழப்புகள் அரங்கேறி வருகின்றன.
சமீபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியொன்றில், மாலை வேளையில் மணப்பெண் தன் திருமணத்தை கொண்டாடும் விதமாக வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டார்.
இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story