70 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீருக்கு மறுக்கப்பட்டது தற்போது கொடுக்கப்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்


70 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீருக்கு மறுக்கப்பட்டது தற்போது கொடுக்கப்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 14 March 2022 8:20 PM IST (Updated: 14 March 2022 8:20 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு- காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டப்பின் மத்திய அரசின் 890 சட்டங்கள் அங்கு செயல்பட்டிற்கு வந்துள்ளன என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற  பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்கிய நிலையில் ஜம்மு-காஷ்மீருக்கான பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான பட்ஜெட் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடைபெற்று வருகிறது. 

அந்த விவாதத்தின் போது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது,

 சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டப்பின்னர் 890 மத்திய சட்டங்கள் ஜம்மு-காஷ்மீரில் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. 70 ஆண்டுகளாக ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு மறுக்கப்பட்டது தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் எஞ்சிய பகுதிகளில் உள்ள பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு டாக்டர் அம்பேத்காரால் வழங்கப்பட்டது தற்போது காஷ்மீரில் உள்ள பட்டியலின, பழங்குடியின மக்களுக்கும் கிடைக்கிறது.

ஜம்மு - காஷ்மீரில் 1,198 புதிய தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 200-க்கும் அதிகமான தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஜம்மு-காஷ்மீரில் சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு 143 கோடி ரூபாய் அவசரகால கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.   


Next Story