ஜம்மு-காஷ்மீரை பிரித்தது மாபெரும் தவறு - மக்களவையில் திருமாவளவன் பேச்சு
ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மாபெரும் தவறு என மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் கூறினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்கிய நிலையில் ஜம்மு-காஷ்மீருக்கான பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு பின்னர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பட்ஜெட்டிற்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பட்ஜெட் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் பங்கேற்றார்.
அப்போது பேசிய திருமாவளவன், ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மாபெரும் தவறாகும். ஜம்மு-காஷ்மீரில் இன்னும் ராணுவ ஆட்சியே நீடிக்கிறது’ என்றார்.
Related Tags :
Next Story