பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் தொடங்கியது; எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் தொடங்கியது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுவினரின் கூட்டம் தொடங்கியது. முன்னதாக இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அம்பேதகர் பவனில் உள்ள பாஜக அலுவலகம் வந்தடைந்தார்.
அங்கு கட்சி நிர்வாகிகள், பாஜக தலைவர் நட்டா மற்றும் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 4 மாநில தேர்தலில் பாஜகவை பெருவெற்றியை பெற செய்ததற்காக அவர்களுக்கு இந்த கவுரவம் செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பாஜக எம்.பிக்கள் செயல்பாடு, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை குறித்து இன்று நடைபெற்று வரும் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என தெரிகிறது.
Related Tags :
Next Story