தேர்தல் தோல்வி குறித்து உ.பி. காங்கிரஸ் தலைவர்களுடன் பிரியங்கா காந்தி ஆலோசனை


தேர்தல் தோல்வி குறித்து உ.பி. காங்கிரஸ் தலைவர்களுடன் பிரியங்கா காந்தி ஆலோசனை
x
தினத்தந்தி 15 March 2022 6:35 PM IST (Updated: 15 March 2022 6:35 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. 

இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருத்தப்படுகிறது.

உத்தரபிரதேசம் மட்டுமின்றி கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்டிலும் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து சோனியா காந்தி விலகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேச தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். 

உத்தரபிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் பிரியங்கா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். 

டெல்லியில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரஸ் அடைந்த மோசமான தோல்வி, தோல்விக்கான காரணங்கள், தேர்தல் யூக்தியில் ஏற்பட்ட பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

Next Story