காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு அழைப்பு விடுத்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு - கடுமையாக எச்சரித்த இந்தியா


காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு அழைப்பு விடுத்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு - கடுமையாக எச்சரித்த இந்தியா
x
தினத்தந்தி 17 March 2022 8:20 PM IST (Updated: 17 March 2022 8:20 PM IST)
t-max-icont-min-icon

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையேயான கூட்டத்திற்கு காஷ்மீர் பிரிவினைவாத தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு என்பது 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பாகும். இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே அரசியல், பொருளாதாரம், வணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பின் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இஸ்லாமிய நாடுகளில் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 48-வது மாநாடு பாகிஸ்தானில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ள வெளியுறவுத்துறை மந்திரிகள் மட்டத்திலான கூட்டத்தில் பங்கேற்குமாறு காஷ்மீர் பிரிவினைவாத  தலைவன் மசரத் ஆலம் பட்டிற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ள மாநாட்டில் பங்கேற்கும்படி காஷ்மீர் பிரிவினைவாத தலைவனுக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அழைப்பு விடுத்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு அழிக்கும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். 

பயங்கரவாதம் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் மற்றும் அமைப்புகளை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஊக்கப்படுத்தாது என நம்புகிறோம். ஆனால், இந்த அமைப்பு அந்த ஒற்றை நோக்கத்தோடு செயல்படுகிறது’ என்றார்.  

Next Story