யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழா - 25-ந் தேதி நடைபெறும் என தகவல்
உத்தர பிரதேசத்தின் முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் 2-வது முறை பதவியேற்க உள்ளார்.
லக்னோ,
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக அபார வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக உத்தர பிரதேசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்தியாவின் அதிக மக்கள் தொகையை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 255 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் உத்தர பிரதேசத்தில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் வெற்றி பெற்ற பாஜக மீண்டும் யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது. இதற்கான பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story