கொரோனா நான்காம் அலைக்கான வாய்ப்பு குறைவு: எனினும் எச்சரிக்கை தேவை- பிரபல மருத்துவர் வலியுறுத்தல்
நாட்டில் கொரோனா நான்காம் அலையை கணிக்க முடியாது என்றும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரபல மருத்துவர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பிரபல வைராலஜிஸ்ட் மற்றும் முன்னாள் பேராசிரியருமான டாக்டர் டி ஜேக்கப் ஜான், ஏ.என்.ஐ யிடம் கொரோனா வைரஸ் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து கூறுகையில்,
நாட்டில் கொரோனா நான்காம் அலைக்கான வாய்ப்புகள் குறைவாகும். ஆனால் கண்டிப்பாக வராது என்று உறுதியாக சொல்ல முடியாது. நான்காம் அலையை கணிக்க அறிவியல் காரணம் எதுவும் இல்லை. ஆனால் வராது என்று யாராலும் கணிக்க முடியாது. மக்கள் அனைவரும் விழிப்புடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
மேலும், புதிய வைரஸ் மாறுபாடுகள் எங்கேயும் தோன்றுகின்றனவா, அல்லது புதிய வைரஸ் தாக்குதல் ஒரு பகுதியில் மட்டும் அதிகரித்து காணப்படுகிறதா என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும், கணித முறையில் புதிய அலைகள் உருவாவதை கணிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story