"தி காஷ்மீர் பைல்ஸ்" படத்தை பார்த்துவிட்டு திரும்பிய பாஜக எம்.பி கார் மீது குண்டுவீச்சு!


தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்த்துவிட்டு திரும்பிய பாஜக எம்.பி கார் மீது குண்டுவீச்சு!
x
தினத்தந்தி 20 March 2022 8:58 PM IST (Updated: 20 March 2022 8:58 PM IST)
t-max-icont-min-icon

வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தை காரணம் காட்டி மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சி விதிக்கப்பட வேண்டும் என்று பாஜக எம்.பி கூறியுள்ளார்.

கொல்கத்தா, 

'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பாஜக எம்.பி ஒருவரின் கார் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேற்கு வங்காள மாநிலம் ராணாகாட்டை சேர்ந்த பாஜக எம்.பி. ஜெகநாத் சர்க்கார் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அவர் கூறியதாவது,

'தி காஷ்மீர் பைல்ஸ்' பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். நான் திரும்பி வரும் வழியில் என் கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. 

அதில் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் நான் உயிர் பிழைத்தேன். சம்பவ இடத்திற்கு 10 நிமிடம் கழித்து போலீசார் வந்தனர்.

மேற்கு வங்காளத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இங்கு ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையைத் தடுக்க, சட்டப்பிரிவு 356(ஜனாதிபதி ஆட்சி) விதிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலம் ஹரிங்காட்டா காவல் நிலையத்தில், நேற்று கல்யாணியில் பாஜக எம்பி ஜெகநாத் சர்க்கார் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story