நாகாலாந்து மாநிலத்திலிருந்து பாஜகவின் முதல் பெண் எம்.பி! போட்டியின்றி தேர்வு
நாகாலாந்திலிருந்து பாஜக சார்பில் வெற்றி பெற்ற முதல் ராஜ்யசபா எம்.பி ஆக அவர் மாறியுள்ளார்.
புதுடெல்லி,
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் மாநிலங்களைவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார் அம்மாநில பாஜக
தலைவர்களில் ஒருவரான எஸ் பேங்னான் கோன்யாக்.
அவர் நாகாலாந்து பாஜக மகிளா மோர்ச்சா தலைவராக உள்ளார். இதன் மூலம், நாகாலாந்திலிருந்து பாஜக சார்பில் வெற்றி பெற்ற முதல் ராஜ்யசபா எம்.பி ஆக
அவர் மாறியுள்ளார்.
இன்று காலை அவர், நாகாலாந்து முதல் மந்திரி நெய்பியூ ரியோ மற்றும் மாநில பாஜக தலைவர் டெம்ஜென் இம்னா அலோங் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஒரேயொரு எம்.பி. பதவி கொண்ட நாகாலாந்தில் அதற்கான தேர்தல் இம்மாதம் 31ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் தன்னை எதிர்த்து போட்டியிட யாரும் இல்லாததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Related Tags :
Next Story