இஸ்ரேல் பிரதமர் வரும் 3-ம் தேதி இந்தியா வருகை - வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்
அரசு முறை பயணமாக இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் அடுத்தமாதம் இந்தியா வர உள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் நட்பு நாடுகளில் இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையில், நப்தலி பென்னெட்டின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தலி பென்னெட் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்றார். நப்தலி பென்னெட் பிரதமராக பொறுப்பெற்ற பின்னரும் இந்தியா - இஸ்ரேல் இடையே நல்லுறவு தொடர்ந்து நீடித்து வருகிறது.
ஸ்காட்லாந்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி - இஸ்ரேல் பிரதமர் பென்னெட் சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு வரும்படி இஸ்ரேல் பிரதமர் பென்னெட்டிற்கு மோடி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், அந்த அழைப்பை ஏற்று இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் அடுத்த மாதம் இந்தியா வர உள்ளார்.
அவர் அடுத்த மாதம் 3-ம் தேதி இந்தியா வர உள்ளார். இந்த பயணத்தின் போது, இந்த பயணத்தின் போது இந்திய பிரதமர் மோடியை பென்னெட் சந்தித்து ஆலோசனை நடதத உள்ளார். இஸ்ரேல் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் பென்னெட் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும்.
பென்னெட்டின் இந்திய பணத்தின் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
ஏப்ரல் 3-ம் தேதி இந்தியா வரும் பென்னெட் தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஏப்ரல் 5-ம் தேதி இஸ்ரேல் திரும்புவார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story