சத்தீஸ்கர்: 45 நாள் கர்ப்பமான சிறுத்தை உயிரிழப்பு..!
சத்தீஸ்கர் மாநிலத்தில் 45 நாள் கர்ப்பமான சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தில் உள்ள சோன்பேரி கிராமத்தில் 45 நாள் கர்ப்பமான சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து கூறிய வனத்துறை அதிகாரி, சோன்பேரி கிராமத்தில் 45 நாள் கர்ப்பமான சிறுத்தை ஒன்று உயிரற்ற நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த சிறுத்தையின் உடல் ராய்ப்பூரில் உள்ள ஆய்வகத்திற்கு தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. முதல்கட்டஆய்வில் சிறுத்தை நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தது தெரிய வந்துள்ளது என்று கூறினார்.
Related Tags :
Next Story