ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோர்ட்டு சம்மன்..!!
ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு, 28-ந்தேதி ஆஜராகுமாறு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
ஐதராபாத்,
ஒன்றுபட்ட ஆந்திராவின் ஹசுர்நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், தற்போதைய ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி அனுமதியின்றி பேரணி நடத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த தொகுதி தற்போது தெலுங்கானாவின் சூர்யபேட் மாவட்டத்தில் வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி மீதான இந்த தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு ஐதராபாத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி உள்பட 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக 28-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கும் விவகாரம் ஆந்திர அரசு வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story