துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கைது
துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜெய்ப்பூர்,
ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் சந்தேகப்படும்படியாக, தன்னுடைய உடமைகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து, சந்தேக நபரிடம் எதற்காக உங்கள் பொருட்களை இன்னொருவரிடம் கொடுக்கின்றீர்கள் என்று சுங்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனை தொடர்ந்து சந்தேக நபரையும், அவரிடம் பொருட்களை பெற்றுக்கொண்ட நபரையும் தனியாக சோதனை செய்தனர்.
அப்போது அந்த பயணி, தனது கால் ஷூவில் 99.50 சதவீதம் தூய்மையான 369 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு நபர், கடத்தி வந்த தங்கத்தை வாங்குவதற்காக வந்ததாக தெரிவித்தார். இதனை அடுத்து பயணிடமிருந்த ரூ 19 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story