வீட்டிற்கு வெளியே நின்று சிகரெட் குடித்துக்கொண்டிருந்த சிறுவன் கழுத்தறுத்து கொலை
தனது வீட்டிற்கு வெளியே நின்று சிகரெட் குடித்துக்கொண்டிருந்த சிறுவனை கழுத்தறுத்து கொன்ற மற்றொரு சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் உள்ள மங்கொல்புரி பகுதியில் செக்டர் 2 என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டின் அருகே நின்று 17 வயது சிறுவன் சிகரெட் குடித்துக்கொண்டிருந்தான்.
அப்போது, அந்த வீட்டை சேர்ந்த 17 வயதான சிறுவன் சக சிறுவனிடம் இங்கே நின்று சிகரெட் குடிக்க வேண்டாம் வேறு இடத்திற்கு செல்லுங்கள் என கூறியுள்ளார். இதனால், இரு சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சிகரெட் குடித்துக்கொண்டிருந்த சிறுவனை அந்த வீட்டின் சிறுவன் தான் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளான்.
இதில், சிகரெட் குடித்துக்கொண்டிருந்த அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கொலை செய்த 17-வயதான சிறுவனை கைது செய்துள்ளனர்.
Related Tags :
Next Story