டெல்லி சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்!
டெல்லி சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் தாக்கல் செய்யப்படுகிறது.
புதுடெல்லி,
டெல்லி சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. டெல்லி துணை முதல் மந்திரியும் டெல்லி அமைச்சரவையின் நிதித்துறை மந்திரியுமான சிசோடியா, 2022-23ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
முன்னதாக, டெல்லி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம், கடந்த 23ம் தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, 2022-23 நிதியாண்டுக்கான மானியங்களுக்கான கோரிக்கைகளை அவர் முன்வைப்பார். 2012-22 நிதியாண்டுக்கான மானியங்களுக்கான துணைக் கோரிக்கைகளை அவர் முன்வைத்து பேசுவார்.
தொடர்ந்து, சிசோடியா "டெல்லி ஒதுக்கீட்டு மசோதா, 2022” ஐ அறிமுகப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story